தமிழ்நாடு

நீரிழிவு நோய்- தேமுதிக தலைவர் விஜயகாந்த் கால் விரல் அகற்றம்

Published On 2022-06-21 10:31 GMT   |   Update On 2022-06-21 12:38 GMT
  • மருத்துவர்களின் ஆலோனைப்படி தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார்.

நீரிழிவு பிரச்சனையால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் விரல் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்னையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.

மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும், மருத்துவர்களின் ஆலோனைப்படி தொடர்ந்து விஜயகாந்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும், கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News