தமிழ்நாடு

சென்னை தின கொண்டாட்டம்: ஓவியம், புகைப்படம், குறும்பட போட்டிகள் நடத்த ஏற்பாடு

Update: 2022-08-15 04:48 GMT
  • புகைப்படப் போட்டியில் பங்கேற்பவர்கள் சென்னையின் கலாசாரம், பாரம்பரியம் ஆகிய தலைப்பில் புகைப்படம்.
  • சென்னை என்ற தலைப்பில் குறும்படம் எடுத்து அனுப்பலாம்.

சென்னை:

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கடந்த 1639-ம் ஆண்டு மெட்ராசாக உருவான சென்னை, சிங்காரச் சென்னையாக பிரமாண்டமாக வளர்ந்து, அனைவரது மனதிலும் உணர்வுப் பூர்வமான இடத்தை பிடித்துள்ளது.

சென்னை பிறந்த தினமான, ஆகஸ்டு 22-ந்தேதியை கொண்டாட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதற்காக ஓவியம், புகைப்படம், குறும்படம் மற்றும் "சோசியல் மீடியா ரீல்ஸ்" போட்டிகள் நடத்தபடுகின்றன.

ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்கள், தேசிய கொடியை தலைப்பாக வைத்து, தங்கள் படைப்பாற்றலை வெளிக்கெண்டு வரும் வகையில், ஓவியம் வரைந்து அனுப்பலாம்.

புகைப்படப் போட்டியில் பங்கேற்பவர்கள் சென்னையின் கலாசாரம், பாரம்பரியம் ஆகிய தலைப்பில் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்.

சிறந்த புகைப்படங்கள், மாநகராட்சியின் சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்படும்.

"சோசியல் மீடியா ரீல்ஸ்" போட்டியில் பங்கேற்பவர்கள், சென்னையின் கலாசாரம், பாரம்பரியம் ஆகிய தலைப்பில் 'சோசியல் மீடியா ரீல்ஸ்' அனுப்பலாம். சிறந்த 'ரீல்ஸ்'க்கு பரிசு உண்டு. மாநகராட்சி 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் இவை வெளியிடப்படும்.

'சென்னை' என்ற தலைப்பில் குறும்படம் எடுத்து அனுப்பலாம். சிறந்த குறும்படங்கள், சென்னை தின வலைதளம் மற்றும் மாநகராட்சி ஊடக பக்கத்தில் வெளியிடப்படும்.

மேலும் ஏழை எளிய மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை அழகுபடுத்தி மறுவடிமைப்பு செய்யும் வகையில், திட்ட வடிவமைப்புகளை தயார் செய்து அனுப்பலாம்.

படைப்புகளை, shorturl.at/dlU89 என்ற இணைய தளத்தில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டிகள் குறித்த அறிவிப்புகளுக்கு, GCC Twitter, Facebook@chennaicorp/Greater Chennai Corporation பக்கங்களை பின் தொடரலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News