தமிழ்நாடு

எண்ணூரில் கால்வாய் பணிக்கு அகற்றப்பட்ட பஸ் நிறுத்த நிழற்குடை முட்புதரில் வீசப்பட்டது- மீண்டும் வைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-08-25 07:08 GMT   |   Update On 2023-08-25 07:08 GMT
  • நிழற்குடை அருகே உள்ள முட்புதருக்குள் வீசப்பட்டு பயனற்று கிடக்கிறது.
  • உலகநாதபுரம் மெயின் ரோட்டில் மழைநீர் கால்வாய் பணிக்காக பஸ்நிறுத்த நிழற்குைடயை அகற்றினர்.

திருவொற்றியூர்:

எண்ணூர் உலகநாதபுரம் மெயின் ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் பணி நடைபெற்றது. இதற்காக அங்கிருந்த பஸ் நிறுத்த நிழற்குடையை தற்காலிகமாக அதிகாரிகள் அகற்றினர்.

கடந்த 3 மாதத்துக்கு முன்பு மழைநீர் வடிகால் பணி முடிந்த நிலையில் பஸ் நிறுத்த நிழற்குடையை அதே இடத்தில் வைக்கப்படவில்லை. இதையடுத்து அந்த நிழற்குடை அருகே உள்ள முட்புதருக்குள் வீசப்பட்டு பயனற்று கிடக்கிறது.

நிழற்குடை இல்லாததால் அப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயில் மற்றும் மழை நேரத்தில் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் அவர்கள் பஸ்சுக்காக பஸ்நிறுத்தம் இல்லாத இடத்தில் சாலையோரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

மழைநீர் வடிகால்வாய் பணி முடிந்து நிலையில் அப்பகுதியில் மீண்டும் பஸ்நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து எண்ணூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, உலகநாதபுரம் மெயின் ரோட்டில் மழைநீர் கால்வாய் பணிக்காக பஸ்நிறுத்த நிழற்குைடயை அகற்றினர்.

இந்த பணி முடிந்தும் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த நிழற்குடை முட்புதரில் வீசப்பட்டு கிடக்கிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள். சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் பயணிகள் பயன்பாட்டிற்கு அதே பகுதியில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News