தமிழ்நாடு

நம்ம ஹெல்மெட் என்ற பெயரில் விழிப்புணர்வு: போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் 150 பேருக்கு தலைக்கவசம் வழங்கினார்

Published On 2023-08-26 08:29 GMT   |   Update On 2023-08-26 08:29 GMT
  • பயனிப்பவர் தலைகவசம் அணிவது 9.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • போக்குவரத்து காவல், கூடுதல் கமிஷனர்சுதாகர், இணை கமிஷனர் மயில்வாகனன், துணை கமிஷனர் சமய் சிங் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை:

"உங்கள் பாதுகாப்பே எங்கள் முக்கியத்துவம்" என்ற குறிக்கோளுடன், சென்னை போக்குவரத்து போலீசார் செயல்பட்டு வருகிறார்கள். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

போக்குவரத்து விதிமீறல்களில், ஹெல்மெட் அணிவதை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது, ஏனெனில் இது உயிரைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டை விட, இருச்சக்கர வாகன ஓட்டுனர்கள் தலைகவசம் அணிவது 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது மற்றும் உடன் பயனிப்பவர் தலைகவசம் அணிவது 9.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, "நம்ம ஹெல்மெட்" விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை போக்குவரத்து போலீசாரால் கடந்த 19-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக, ' சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று காலை, அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பில் ''நம்ம ஹெல்மெட்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் 150 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், உடன் பயணித்தவர்களுக்கு ஹெல்மெட் வழங்கினார்.

போக்குவரத்து காவல், கூடுதல் கமிஷனர்சுதாகர், இணை கமிஷனர் மயில்வாகனன், துணை கமிஷனர் சமய் சிங் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News