தமிழ்நாடு

பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்- அரசுத் தேர்வுகள் இயக்ககம்

Published On 2022-07-13 03:46 GMT   |   Update On 2022-07-13 03:46 GMT
  • பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்.
  • விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டலுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை:

தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகியது. இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 14-ந்தேதி (நாளை) வியாழக்கிழமை முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Notification பக்கத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டலுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News