தமிழ்நாடு

என்.எல்.சி. நிலப்பறிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்வதா? அன்புமணி ராமதாஸ்

Published On 2023-05-06 05:20 GMT   |   Update On 2023-05-06 05:20 GMT
  • அடக்குமுறையும், அத்துமீறலும், பழிவாங்கலும் எல்லா காலமும் வெற்றி பெறாது.
  • அறத்தின் முன் மண்டியிடும் காலம் வெகுவிரைவில் வந்தே தீரும்.

கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியம் கத்தாழை, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, நெல்லிக் கொல்லை, சின்ன நெற்குணம் ஆகிய 5 ஊராட்சிகளின் செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகக் காரணங்களுக்காக இடமாற்றம் என்று கூறப்பட்டாலும், என்.எல்.சி சுரங்க நிலப்பறிப்புக்கு எதிராக கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அவர்கள் உதவியாக இருந்தது தான் இந்த இடமாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அப்பட்டமான இந்த பழிவாங்கல் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

அடக்குமுறையும், அத்துமீறலும், பழிவாங்கலும் எல்லா காலமும் வெற்றி பெறாது. அவை அறத்தின் முன் மண்டியிடும் காலம் வெகுவிரைவில் வந்தே தீரும். இதை உணர்ந்து ஊராட்சி செயலாளர்களின் பணியிட மாற்ற ஆணையையும், பெண்கள் மீதான பொய்வழக்குகளையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மக்கள் உணர்வுகளை மதித்து நிலப்பறிப்பு நடவடிக்கைகளை கைவிடுவதுடன், என்.எல்.சி.யை வெளியேற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News