தமிழ்நாடு

லாலு பிரசாத் யாதவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை விரைவில் குணம் அடைய மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2022-07-08 09:38 GMT   |   Update On 2022-07-08 10:33 GMT
  • ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம்.
  • தனது தந்தையாரின் உடல்நிலை சீராக உள்ளது என்று தேஜஸ்வி யாதவ் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்து வருந்துகிறேன்.

தனது தந்தையாரின் உடல்நிலை சீராக உள்ளது என்று தேஜஸ்வி யாதவ் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News