தமிழ்நாடு

விளக்கு கம்பங்களில் தேசியக்கொடி

விளக்கு கம்பங்களில் 33,500 தேசியக்கொடி- மாநகராட்சி ஏற்றி வைப்பு

Update: 2022-08-15 09:52 GMT
  • நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
  • மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை மற்றும் நேப்பியர் பாலம் ஆகியவற்றில் மூவர்ண விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் 13, 14, 15 ஆகிய நாட்களில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதற்காக சுமார் 20 லட்சம் கொடிகள் தேவைப்படும் என்பதால், உற்பத்தி மற்றும் விற்பனைக்காக மகளிர் குழுக்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு ஆலோசனைகளையும் மாநகராட்சி வழங்கி இருந்தது.

மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை மற்றும் நேப்பியர் பாலம் ஆகியவற்றில் மூவர்ண விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் உள்ள விளக்கு கம்பங்களிலும் மூவர்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் மாநகராட்சி விளக்கு கம்பங்களில் 33,500 தேசியக் கொடிகளை ஏற்றி இருப்பதாகவும், அதற்கு தேவையான கொடிகளை தனியார் வங்கிகள் வழங்கி இருப்பதாகவும் மாநகராட்சி ஆைணயர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். மேலும் மாநகராட்சி வாகனங்களிலும் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News