தமிழ்நாடு
செம்மரம் கடத்திய 7 பேர் கைது

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர் கைது

Published On 2022-05-10 13:55 GMT   |   Update On 2022-05-10 13:55 GMT
சித்தூரில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.3 கோடி மதிப்பிலான 89 செம்மரக்கட்டைகளை ஆந்திர மாநில போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சித்தூர்:

சித்தூர் மாவட்டம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வருவதாக சித்தூர் ரூரல் சர்க்கிள் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்து.

இதனை அடுத்து ஆந்திர போலீசார் சித்தூர் - ராணிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

அப்போது அவ்வழியாக வந்த ஒரு வேன் மற்றும் கார்களில் நடத்தப்பட்ட சோதனையில், மொத்தம்  2720 கிலோ எடை கொண்ட 89 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு மூன்று கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மரக்கட்டைகளை கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்கிற சேட்டு (வயது 44),   முருகேசன் என்கிற ஞானபிரகாசம்  (50), பெருமாள் வெங்கடேஷ்  (44), கரியா ராமன் (27), குலஞ்ஜன்(36),  வெங்கடேஷ்(37),  கோவிந்தராஜ்  (21) ஆகியோரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.  

அவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் செம்மரக் கடத்ததலுக்கு உதவியதாக மூன்று வாகனங்களையும் ஆந்திர போலீசார் கைப்பற்றி உள்ளனர். 
Tags:    

Similar News