தமிழ்நாடு
கோப்புப்படம்

மெட்ரோ ரெயில் பணி காரணமாக வானுவம்பேட்டை-மடிப்பாக்கம் ரோடு ஒரு வழிப்பாதையானது

Update: 2022-05-03 08:25 GMT
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து மடிப்பாக்கம் வழியாக கீழ்க்கட்டளை, மேடவாக்கம் நோக்கி செல்லும் பஸ்கள் வானுவம்பேட்டையில் இருந்து 200 அடி சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட வழித்தட பணிகள் பல இடங்களில் நடைபெறுகிறது. இதில் பரங்கிமலை-மேடவாக்கம் மெயின் ரோட்டில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக வானுவம்பேட்டை- மடிப்பாக்கம் ஆக்சிஸ் வங்கி வரையிலான சாலை ஒரு வழியாக்கப்பட்டுள்ளது.

இதனால் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து மடிப்பாக்கம் வழியாக கீழ்க்கட்டளை, மேடவாக்கம் நோக்கி செல்லும் பஸ்கள் வானுவம்பேட்டையில் இருந்து 200 அடி சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் வேளச்சேரி ரெயில் நிலையம் முன்பிருந்து வலது புறமாக திரும்பி வேளச்சேரி- பள்ளிக்கரணை மெயின் ரோட்டில் கைவேலி சந்திப்பில் இருந்து வலது புறமாக திரும்பி சதாசிவம் நகர், ராம்நகர், பாலையா கார்டன் வழியாக ஆக்சிஸ் வங்கியை சென்றடைய வேண்டும்.

மறுமார்க்கத்தில் மேடவாக்கத்தில் இருந்து பரங்கிமலை செல்லும் பாதையில் எந்த மாற்றமும் இல்லை.

சுற்றுப்பாதையில் பஸ்கள் செல்வதால் வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக ரூ. 4 கட்டணம் வசூலிக்ககப்படுகிறது.

இந்த மாற்றம் காரணமாக வானுவம்பேட்டை, ஆயில்மில், குமரன் தியேட்டர், மடிப்பாக்கம் கூட்டு ரோடு பகுதிகளுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதை தவிர்க்க மாற்று வழி இல்லை என்று அதிகாரிகள் கூறி விட்டனர்.

இந்த பகுதி மக்கள் ஆட்டோக்களில் பயணிக்கின்றனர். உட்புற பகுதி வழியாக ஆட்டோக்கள் செல்கின்றன. ரூ. 20 முதல் ரூ. 30 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.
Tags:    

Similar News