தமிழ்நாடு
ஏப்ரல் மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 44 லட்சம் பேர் பயணம்

ஏப்ரல் மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 44 லட்சம் பேர் பயணம்

Update: 2022-05-02 09:16 GMT
சென்னையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மெட்ரோ ரெயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை:

சென்னை மெட்ரோ ரெயிலில் ஏப்ரல் மாதத்தில் 44 லட்சத்து 46 ஆயிரத்து 330 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 25-ந் தேதி ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 475 பேர் பயணம் செய்தனர். ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக பயணிகள் அதிகரித்து வந்த நிலையில் மார்ச் மாதத்தைவிட ஏப்ரல் மாதத்தில் சற்று குறைந்துள்ளது. 

மார்ச் மாதத்தில் 44 லட்சத்து 67 ஆயிரத்து 756 பேர் பயணம் செய்தனர். 21 ஆயிரம் பயணிகள் ஏப்ரல் மாதத்தில் குறைந்துள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மெட்ரோ ரெயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News