தமிழ்நாடு
ஜி.கே.வாசன்

பஸ் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2022-03-30 04:23 GMT   |   Update On 2022-03-30 04:23 GMT
இழப்பீட்டை சரிசெய்ய நிதி ஒதுக்கி பஸ் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவு, செலவுக்கு இழப்பீடு ஏற்படாத வகையில் போக்குவரத்துக் கழகங்களை செயல்படுத்த முற்பட வேண்டும். இருப்பினும் இழப்பீடு ஏற்படுமேயானால் அரசே அதை ஈடுசெய்ய வேண்டும்.

தற்போதைய நிலையில் பென்சன் டிரஸ்ட் 28 ஆயிரம் கோடி பற்றாக்குறை நிதி நிலையில் உள்ளதால் பென்‌ஷனர்களுக்கு பணப் பலன்களும், அகவிலைப்படி உயர்வும் வழங்க இயலவில்லை என அறியப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் வரவு, செலவுகளில் ஏற்படும் இழப்பீட்டை சரி செய்ய நிதி ஒதுக்கி, அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News