தமிழ்நாடு
புது மண்டபத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள புதுமண்டபம் கடைகள் அதிரடியாக அகற்றம்

Published On 2022-02-21 08:05 GMT   |   Update On 2022-02-21 08:05 GMT
குன்னத்தூர் சத்திரத்தில் புதுமண்டபம் வியாபாரிகளுக்கு மின் வசதியுடன் கூடிய கடைகளை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கூறினர்.
மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அம்மன் சன்னதி எதிரே புது மண்டபம் உள்ளது. இங்கு சுமார் 300 கடைகள் உள்ளன. இந்த நிலையில் புதுமண்டபத்தை புனரமைப்பதற்காக, அங்குள்ள கடைகளை அகற்றுவது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்காக குன்னத்தூர் சத்திரத்தில் புதுமண்டபம் வியாபாரிகளுக்காக, கடைகள் ஒதுக்கீடு செய் யப்பட்டு உள்ளன. இதனைத் தொடர்ந்து புதுமண்டபத்தில் உள்ள கடைகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில் குன்னத்தூர் சத்திரத்தில் 14 கடைகளுக்கு மின்மீட்டர் பொருத்தப்பட்டது. எனவே புதுமண்டப கடைகளை காலி செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. இருந்த போதிலும் உரிமையாளர்கள் கடைகளை அகற்ற முன் வரவில்லை.

இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் ஊழியர்கள் இன்று காலை போலீஸ் படையுடன் புது மண்டபத்திற்கு வந்தனர். அவர்கள் 14 கடைகளில் உள்ள பொருட்களை அகற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டனர். இதற்கு புதுமண்டப வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் புது மண்டபத்தில் உள்ள 14 கடைகளும் அகற்றப்பட்டன.

இதுகுறித்து புதுமண்டப வியாபாரிகள் கூறுகையில், “புதுமண்டப வியாபாரிகளில் 14 பேருக்கு மட்டும் குன்னத்தூர் சத்திரத்தில் மின்மீட்டர் வசதியுடன் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அந்த கடைகளுக்கு மின்சார வசதி செய்து தரப்படவில்லை.

கோவில் நிர்வாகத்திடம் கூடுதல் அவகாசம் கேட்டு கோரிக்கை விடுத்தோம். இந்த நிலையில் கோவில் அதிகாரிகள் முன் அறிவிப்பின்றி கடைகளை அகற்றி வருகின்றனர். எங்களையும் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.

குன்னத்தூர் சத்திரத்தில் புதுமண்டபம் வியாபாரிகளுக்கு மின் வசதியுடன் கூடிய கடைகளை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். புதுமண்டபம் கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Tags:    

Similar News