தமிழ்நாடு
கோப்புப்படம்

கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- 60 இடங்களில் வேட்பு மனுத்தாக்கல்

Published On 2022-01-28 04:12 GMT   |   Update On 2022-01-28 04:12 GMT
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில் கோவை மாவட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கோவை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் என 831 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்ய 20 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதே போல நகராட்சிகளில் போட்டியிட வேட்பு மனுவை அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் வேட்பு மனுதாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிட வேட்பு மனுவை அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில் கோவை மாவட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது. 5-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 7-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.

மேலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 கார்களில் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக வேட்பாளரின் ஆதரவாளர்கள் 200 மீட்டருக்கு முன்பு தடுத்து நிறுத்தப்படுவார்கள். வேட்பாளர் மட்டும் முக கவசம் அணிந்து வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வேறு யாரும் அவருடன் செல்ல அனுமதி இல்லை.
Tags:    

Similar News