தமிழ்நாடு
சாதனை படைத்த புறா

விழுப்புரம்-காயல்பட்டினம் வரையிலான பந்தயம்: 420 கி.மீ. தூரத்தை 5½ மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்த புறா

Published On 2022-01-18 07:09 GMT   |   Update On 2022-01-18 07:09 GMT
வெகு தூர புறா பந்தயத்தில் காயல்பட்டினத்தை சேர்ந்த அகமது ரியாஸ் என்பவரின் புறா 420 கி.மீ. தூரத்தை 5 மணி நேரம் 26 நிமிடம் 58 வினாடியில் கடந்து வந்து முதலிடத்தை பிடித்தது.
ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ரேசிங் பீஜியன் கிளப் 6-வது ஆண்டு வெகு தூர புறா பந்தயம் நடைபெற்றது. விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் இருந்து தொடங்கிய பந்தயத்தில் காயல்பட்டினத்தில் சேர்ந்த 12 பேரின் 105 புறாக்கள் பங்கேற்றன. இதில் காயல்பட்டினத்தை சேர்ந்த அகமது ரியாஸ் என்பவரின் புறா 420 கி.மீ. தூரத்தை 5 மணி நேரம் 26 நிமிடம் 58 வினாடியில் கடந்து வந்து முதலிடத்தை பிடித்தது. இவரது மற்றொரு புறா 5 மணி நேரம் 50 நிமிடம் 58 வினாடியில் வந்து 3-வது இடத்தை பிடித்தது.

நெய்னார் தெருவைச் சேர்ந்த முகமது ஹாசிம் என்பவரின் புறா 5 மணி நேரம் 31 நிமிடம் 1 வினாடியில் வந்து சேர்ந்து 2-வது இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசளிப்பு விழா விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான ஏற்பாடுகளை கிளப் தலைவர் முகமது ரியாஸ், துணைத்தலைவர் லெப்பை, செயலாளர் முகமது ஹாசிம், பொருளாளர் அகமது, துணைப் பொருளாளர் இப்னு மாஜா உள்பட பலர் செய்திருந்தனர்.


Tags:    

Similar News