தமிழ்நாடு
கோவில் முன்பாக நின்று தரிசனம் செய்த பக்தர்கள்.

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் வெளியில் நின்று தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2022-01-18 06:37 GMT   |   Update On 2022-01-18 06:37 GMT
கொரோனா கட்டுப்பாடு காரணமாக காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்தனர்.
ஆட்டையாம்பட்டி:

நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். 

தைப்பூச நாளன்று இரவு பகல் முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டே இருக்கும். இந்த திருவிழா 8 நாட்கள் நடைபெறும். 

இந்த வருடம் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பக்தர்கள் கூடுவதற்கு அரசு தடை விதித்திருந்தது. இதனால் பக்தர்கள் கூட்டமின்றி விழா நடந்தது. குறைவான பக்தர்கள் கோயில் முன்பு நின்று தரிசனம் செய்தனர். 

தைப்பூச திருவிழாவிற்காக போடப்பட்ட கடைகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டம் இல்லாததால் பெரும் பந்தல் ஆக காணப்பட்டது.  நூற்றுக்கணக்கான கடைகள் வியாபாரம் இல்லாமல் வெறிச்சோடியது. 

வழக்கமாக வெளியூர் பக்தர்கள் வந்து செல்ல அரசு சார்பில் சிறப்பு பேருந்து வசதி செய்யப்படும்.  ஆனால் இந்த ஆண்டு பேருந்து வசதி செய்யப்படவில்லை. 

அரசின் தடை காரணமாக பக்தர்கள்  ஏமாற்றம் அடைந்தனர். ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோயில் நிர்வாகத்தினரும் அரசின் நெறிமுறைகளை கடைபிடித்து எளியமுறையில் விழாவை நடத்தினர்.
Tags:    

Similar News