தமிழ்நாடு
கோப்பு படம்

உற்சாகத்துடன் நடைபெற்ற மாடுகள் பூ தாண்டும் நிகழ்ச்சி

Published On 2022-01-17 10:34 GMT   |   Update On 2022-01-17 10:34 GMT
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மாடுகள் பூ தாண்டும் நிகழ்ச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணும் பொங்கலன்று  மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி  நடத்துவது வழக்கம். மாடுகளை குறிப்பிட்ட இடத்தில் இருந்து விரட்டும்போது  அந்த மாடுகள் ஓடிவந்து எல்லைக்கோட்டை தாண்டுவதை, பூ தாண்டும் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

மோகனூர் அருகே உள்ள ஊனங்கால்பட்டி கிராமத்தில் இந்த ஆண்டு காணும்பொங்கலை முன்னிட்டு நேற்று இந்த விழா நடத்தப்படுவதாக இருந்தது. நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் இந்த விழா இன்று உற்சாகமாக நடத்தப்பட்டது.

இதில் குன்னத்தூர், சின்னபெத்தாம்பட்டி, மல்லமூச்சாம்பட்டி, மேலப்பட்டி, ஊனங்கால்பட்டி ஆகிய 5 கிராம மக்கள் கலந்துகொண்டனர். இந்த கிராமங்களில் இருந்து 5 கோவில் மாடுகள் கொண்டுவரப்பட்டு பூக்கள் தாண்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் முதல் இடம் பிடித்த சின்னபெத்தாம்பட்டி கோவில் மாட்டுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இவ்விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். மக்கள் கூட்டத்தை பார்த்து மாடுகள் கலைந்து ஓடியதில் 10 க்கும் மேற்பட்டோருக்கு lலேசான காயம் ஏற்பட்டது.  
Tags:    

Similar News