தமிழ்நாடு
மாதவரம் பஸ் நிலையம்

ஆந்திராவுக்கு சிறப்பு பஸ்கள் நிறுத்தம்: வெறிச்சோடிய மாதவரம் பஸ் நிலையம்

Published On 2022-01-12 10:21 GMT   |   Update On 2022-01-12 10:21 GMT
ஆந்திரா மாநிலத்துக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளன.

கொளத்தூர்:

பொங்கல் பண்டிகை விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகின்றன.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்ல மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கபட்டு இருந்தது.

இந்த நிலையில் திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது.

இதனால் மாதவரம் பஸ் நிலையம் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கான எந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாக காட்சி அளிக்கிறது.

இதையடுத்து ஆந்திரா மாநிலத்துக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘கொரோனா பரவல் காரணமாக பயணிகள் வெளியூர் செல்ல ஆர்வம் காட்டவில்லை. இதனால் மாதவரம் பஸ் நிலையத்தில் வழக்கத்தைவிட பயணிகளின் வருகை பாதிக்கும் குறைவாக உள்ளது. ஒரு நாளைக்கு 200 பஸ்கள் தயாராக உள்ள நிலையில் 1000-க்கும் குறைவான பயணிகளே வந்து செல்கின்றனர். இதனால் சிறப்பு பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Tags:    

Similar News