தமிழ்நாடு
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங்கால் மாணவர் தற்கொலை முயற்சி

Published On 2021-12-06 05:22 GMT   |   Update On 2021-12-06 07:43 GMT
மருத்துவ மாணவரை ராகிங் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மூத்த மாணவர்கள் மீது வழக்குப்பதியாமல் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூத்த மாணவர்கள் சிலர் ராகிங் செய்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த மாணவர் இதுகுறித்த கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால், சில நாட்களிலேயே அந்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.

இந்நிலையில், கல்லூரி விடுதியில் தான் தங்கியிருந்த அறையிலேயே மாணவர் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறுகையில், "ராகிங் குறித்து புகார் அளித்த மாணவர் சில நாட்களிலேயே அதனை திரும்ப பெற்றுவிட்டார்.  மாணவரின் புகாரை ஏற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட மூத்த மாணவர்களிடம் விசாரணையை முடிக்கிவிட்டோம். இருப்பினும் மன அழுத்தத்துடன் காணப்பட்ட மாணவருக்கு உளவியல் ரீதியான ஆலோசனையும் வழங்கப்பட்டது " என்றனர்.

இதையடுத்து, தகவல் அறிந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவர் தற்கொலைக்கு முயன்றது உறுதியானது.

மேலும், மாணவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும், ராகிங் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 4 மாணவர்களிடமும் வழக்குப்பதியாமல் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்.. திருமணமாகாமலேயே கர்ப்பம்: சிசுவை கழிவறையில் அமுக்கி கொன்ற தாய்- விசாரணையில் அம்பலம்
Tags:    

Similar News