செய்திகள்
வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீர்

திருப்பத்தூரில் வீடுகளை சூழ்ந்துள்ள நீரை அகற்ற வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2021-11-24 21:45 GMT   |   Update On 2021-11-24 21:45 GMT
திருப்பத்தூரில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்தது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூரில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்தது. திருப்பத்தூர் நகராட்சி சிவராஜ் பேட்டை ஜெயா நகர் பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர், பாதாளச் சாக்கடை கழிவுநீர் கலந்து வீடுகளை சூழ்ந்து முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது. மழை விட்டு 3 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை நீரை அப்புறப்படுத்த யாரும் வரவில்லை.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் நகராட்சி பகுதியான சிவராஜ் பேட்டை ஜெயா நகரில் மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து தேங்கி கிடக்கிறது. இதுகுறித்து நகராட்சியில் கூறினால் பாதாள சாக்கடை திட்ட பணிகள் செய்யும் அதிகாரிகளிடம் கூறுங்கள் என்றும், பாதாள சாக்கடை திட்ட பணி அதிகாரிகளிடம் கூறினால் நகராட்சியில் கூறுங்கள் என்றும் கூறுகிறார்கள். பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக மழை நீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Tags:    

Similar News