செய்திகள்
முல்லை பெரியாறு அணை

130 அடியை எட்டிய பெரியாறு அணை நீர் மட்டம்

Published On 2021-07-20 05:18 GMT   |   Update On 2021-07-20 05:18 GMT
தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 130 அடியை எட்டியுள்ளது.
கூடலூர்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் அணையின் நீர் மட்டம் 136 அடி வரை உயர்ந்த நிலையில் அதன் பிறகு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர் மட்டம் சரியத் தொடங்கியது.

கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அணையின் நீர் மட்டம் மீண்டும் உயர்ந்து வந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 130.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,717 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1200 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4709 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர் மட்டம் 68.29 அடியாக உள்ளது. வரத்து 1335 கன அடி. திறப்பு 769 கன அடி. நீர் இருப்பு 5392 மில்லியன் கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி.

நேற்று மழை சற்று குறைந்ததால் வைகை அணை நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாகியுள்ளது. மழை மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் முழு கொள்ளளவான 71 அடியை வைகை அணை நீர் மட்டம் நெருங்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
Tags:    

Similar News