செய்திகள்
வசந்த் அன் கோ நிறுவனர்

வாடிக்கையாளர்களின் திருப்திக்கே முதலிடம்... உற்சாகத்துடன் 44வது ஆண்டில் வசந்த் அன் கோ

Published On 2021-07-19 11:39 GMT   |   Update On 2021-07-19 12:05 GMT
அனைத்து தரப்பு மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப தவணை முறையில் பொருட்களை வழங்குவதுதான் வசந்த் அன் கோவின் சிறப்பு அம்சம்.
சென்னை:

வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள வசந்த் அன் கோ, அன்று முதல் இன்று வரை வாடிக்கையாளர்களின் திருப்திக்கே முதல் முன்னுரிமை கொடுக்கிறது. அனைத்து தரப்பு மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப தவணை முறையில் பொருட்களை வழங்குவதுதான் வசந்த் அன் கோவின் சிறப்பு அம்சம்.

ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்ப, வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விற்பனையை வழங்குவதுடன், வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுப் பொருட்களையும் வழங்கி மகிழ்வித்து வருகிறது. எல்இடி டிவி, ஏசி, வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், மைக்ரோவேவ் அவன், வாட்டர் ஹீட்டர் உள்பட அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.



வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் 44வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள வசந்த் அன் கோ, நவீன காலத்திற்கு ஏற்ப ஆன்லைன் வர்த்தகத்திலும் வெற்றிக்கொடி நாட்டுகிறது. 44வது ஆண்டு பயணத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி உள்ளது. தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, இன்று முதல் 30ம் தேதி வரை மொபைல், லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு பொருடகளை வெல்லும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதற்காக பிரத்யேக ஆன்லைன் போட்டியை நடத்துகிறது. வாடிக்கையாளர்கள் https://vasanthandco.in/ என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

நீண்ட கால வர்த்தக பயணத்தில் ஆதரவு தெரிவித்த வாடிக்கையாளர்களுக்கு வசந்த் அன் கோ நன்றி தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News