செய்திகள்
கோப்புபடம்

புனேவில் இருந்து சென்னைக்கு 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று வருகிறது

Published On 2021-06-20 08:47 GMT   |   Update On 2021-06-20 08:47 GMT
ஒரு வாரத்தில் தமிழகத்திற்கு 8 லட்சத்திற்கும் அதிகமாக தடுப்பூசி வந்த நிலையில் புனேவில் இருந்து மேலும் 3 லட்சத்து 14 ஆயிரத்து 110 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு இன்று மாலை வருகிறது.

சென்னை:

கொரோனா 2-வது அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழக அரசும் ஆங்காங்கே சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி வழங்கி வருகிறது. ஆனாலும் பல மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடம் கூடுதலாக தடுப்பூசி அனுப்பி வைக்க வேண்டும் என அரசு கோரிக்கை வைத்துள்ளது.

அதை ஏற்று மத்திய அரசும் 2 நாட்களுக்கு ஒரு முறை விமானம் மூலம் தடுப்பூசியை அனுப்பி வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்திற்கு 8 லட்சத்திற்கும் அதிகமாக தடுப்பூசி வந்த நிலையில் புனேவில் இருந்து மேலும் 3 லட்சத்து 14 ஆயிரத்து 110 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு இன்று மாலை வருகிறது.

இதை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவைக்கு ஏற்ப உடனடியாக பிரித்து அனுப்ப சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இது தவிர ஐதராபாத்தில் இருந்து 60 ஆயிரத்து 800 கோவேக்சின் தடுப்பூசிகளும் நாளை வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு ஓரளவு நீங்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News