செய்திகள்
கொரோனா பரிசோதனை

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு கால்நடை டாக்டர்கள் மூலம் கொரோனா பரிசோதனை

Published On 2021-06-08 09:12 GMT   |   Update On 2021-06-08 09:12 GMT
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சேலம்:

சேலம் குரும்பப்பட்டியில் உயிரியல் பூங்கா உள்ளது.

இந்த பூங்காவில் புள்ளிமான், கடை மான், குரங்கு, முதலை, உடும்பு நரி, மரநாய், ஆமைகள், நீர்ப்பறவைகள், மயில், கிளிகள் உட்பட 200 விலங்கினங்கள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், காவலர், தூய்மைப் பணியாளர் 30 பேரும் நோய்தடுப்பு விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் சரியாக உணவு சாப்பிடுகிறதா, உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதா, நோய்க்குறி அறிகுறி உள்ளதா என பரிசோதிக்கப்பட்டது. அதில் எந்த விலங்குக்கும் பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. இதுபோன்று வாரம் ஒருமுறை பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு உணவு கொடுப்பவர் காலை, மாலையில் அதன் செயல்பாடு குறித்து கண்காணித்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலை, நரிக்கு வழங்கப்படும் இறைச்சி சுடுநீரில் சுத்தம் செய்தபின் வழங்கப்பட்டு வருகிறது.

பூங்காவில் உள்ள அனைத்து உயிரினங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கண்காணிப்பு தோற்று குறையும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News