செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை

6 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி நிறைவு- பள்ளிக்கல்வித்துறை தகவல்

Published On 2021-05-22 17:13 GMT   |   Update On 2021-05-22 17:13 GMT
பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் உடனடியாக புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், ஜூன் மாதத்திற்குள் தொற்று குறைந்துவிட்டால், ஜூலை மாதத்தில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான இலவச பாடப் புத்தக்கங்கள் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அச்சடித்து முடிக்கப்பட்டுள்ளன.

அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 6 கோடி இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்டதாகவும், பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் உடனடியாக புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் தயார் நிலையில் உள்ளதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News