செய்திகள்
கோப்புபடம்

பேராசிரியர்கள் கல்லூரிக்கு வரவேண்டாம்: வீடுகளில் இருந்து ஆன்லைன் வகுப்பு நடத்த அனுமதி - உயர்கல்வித்துறை அறிவுறுத்தல்

Published On 2021-04-28 12:29 GMT   |   Update On 2021-04-28 12:29 GMT
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதால் பேராசிரியர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வகுப்பு நடத்த உயர்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

சென்னை:

கொரோனா தொற்று பரவல் கடந்த மார்ச் மாதம் முதல் படிப்படியாக அதிகரித்ததைத் தொடர்ந்து நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள். ஆனாலும், உதவி பேராசிரியர்கள், பேராசிரியர்கள் கல்லூரிக்கு தினமும் வந்து செல்கின்றனர்.

மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை என்றாலும், பேராசிரியர்கள் வருவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பல்வேறு கல்லூரிகளில் ஆசிரியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் வீடுகளில் இருந்து கல்லூரி ஆசிரியர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இணை இயக்குனர் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கல்லூரி ஆசிரியர்கள் கல்லூரிக்கு வர நிர்பந்திக்கக் கூடாது. ஆன்லைன் வகுப்புகளை வீட்டில் இருந்து நடத்தலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News