செய்திகள்
சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

கேரளாவில் 2 நாள் பொது முடக்கம்- தேனி மாவட்டத்தில் இருந்து சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

Published On 2021-04-25 08:38 GMT   |   Update On 2021-04-25 08:38 GMT
கேரளாவில் 2 நாள் பொது முடக்கம் நடைமுறைபடுத் தப்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

கம்பம்:

தமிழகத்தை போலவே கேரளாவிலும் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்த அம்மாநில அரசு வார இறுதி நாட்களில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது.

இதனால் வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்குள் செல்ல கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றனர். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் எந்த வாகனங்களையும் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கொண்டு செல்லப்பட்டன.

முழு ஊரடங்கு குறித்த தகவல் தெரியாமல் பல ஊர்களில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு செல்ல முயன்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. சோதனைச்சாவடியில் இது குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கேரளாவுக்கு வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இன்று காலையும் இதே நிலை நீடித்தது. போலீசார் மற்றும் வனத்துறையினர் சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கேரளாவுக்குள் வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

Tags:    

Similar News