செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது

Published On 2021-04-15 07:38 GMT   |   Update On 2021-04-15 07:38 GMT
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ஒரு சவரன் ரூ.34 ஆயிரத்து 800-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4 ஆயிரத்து 350 ஆக உள்ளது.
சென்னை:

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. கடந்த 9-ந் தேதி தங்கம் பவுன் மீண்டும் ரூ. 35 ஆயிரத்தை தாண்டியது.

நேற்று பவுன் ரூ. 35 ஆயிரத்து 40-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்ததால் பவுன் ரூ. 35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 34 ஆயிரத்து 800-க்கு விற்றது. கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 4 ஆயிரத்து 350 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ. 1000 அதிகரித்து ரூ. 72 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 72.90-க்கு விற்கிறது.
Tags:    

Similar News