செய்திகள்
கொரோனா வைரஸ்

குமாரபாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு கொரோனா

Published On 2021-04-09 09:41 GMT   |   Update On 2021-04-09 09:41 GMT
குமாரபாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வெங்கடாசலத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
குமாரபாளையம்:

சட்டமன்ற தேர்தலில் குமாரபாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளராக வெங்கடாசலம் என்பவர் நிறுத்தப்பட்டார். இவர் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் தேர்தல் பணிகளை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் உடல் சோர்வடைந்ததை அடுத்து ஈரோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். சளி, ரத்த மாதிரி எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து டாக்டர்கள், அவரிடம் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என தெரிவித்தனர். அதற்கு வெங்கடாசலம், நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்கிறேன் என தெரிவித்தார்.

இதையடுத்து அவர், தனக்கு சொந்தமான பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெடியரசன்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இதை அறிந்த கட்சி நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News