செய்திகள்
கொரோனா வைரஸ்

திருச்சியில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி மாணவருக்கு கொரோனா

Published On 2021-03-14 08:22 GMT   |   Update On 2021-03-14 08:22 GMT
திருச்சியில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
திருச்சி:

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது.

இதற்கிடையே திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் முதலில் இறுதியாண்டும், அதனைத்தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இக்கல்லூரியில் இயற்பியல் இரண்டாமாண்டு படித்து வரும் அரியமங்கலம் காட்டூர் பகுதியை சேர்ந்த 21 வயது மாணவர் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்து சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல் சோர்வு மற்றும் சளி இருந்துள்ளது.

இதையடுத்து அந்த மாணவர் தானாகவே திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுபற்றிய தகவல் கல்லூரி நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் மாணவரை கல்லூரிக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தியதோடு, உரிய சிகிச்சை பெறவும் கூறப்பட்டது. மேலும் அவருடன் வகுப்பில் ஒன்றாக இருந்த மற்ற மாணவர்களும் உரிய பரிசோதனை செய்து கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News