செய்திகள்
திருச்சி விமான நிலையம்

திருச்சி விமான நிலையத்தில் 9 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2021-03-14 02:23 GMT   |   Update On 2021-03-14 02:23 GMT
திருச்சி விமான நிலையத்தில் 9 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 12 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 5.15 மணிக்கு துபாயில் இருந்து வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கியது. அந்த விமானத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் வான் நுண்ணறிவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அந்த விமானம் நேற்று காலை திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த 14 பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே அவர்களை தனியே அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 2 பேர் தவிர மற்றவர்கள், தங்கள் உடலில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

மற்ற 12 பேரிடம் இருந்து 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்த பின்னர்தான், தங்கம் கடத்தி வந்த பயணிகளின் விவரம் தெரியவரும். மேலும் கூடுதல் தங்கம் பறிமுதல் செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
Tags:    

Similar News