செய்திகள்
தடம் புரண்ட சரக்கு ரெயில்.

அரக்கோணம் அருகே ஒரே வாரத்தில் 2-வது முறையாக சரக்கு ரெயில் தடம் புரண்டது

Published On 2021-01-24 09:35 GMT   |   Update On 2021-01-24 09:35 GMT
அரக்கோணம் அருகே ஒரே வாரத்தில் 2-வது சரக்கு ரெயில் தடம் புரண்ட சம்பவம் ரெயில்வே அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம்:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சரக்கு ரெயில் புறப்பட்டு ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டாவுக்கு நேற்று சென்றது.

அரக்கோணம் அருகே மேல்பாக்கம் பகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது ரெயிலின் 25 மற்றும் 26-வது பெட்டிகளின் சக்கரங்கள் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.

திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் என்ஜின் டிரைவர் ரெயிலை சாமர்த்தியமாக நிறுத்தினார்.

அரக்கோணம் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே ஜல்லி கற்களை ஏற்றி வந்த சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அந்த பகுதியில் தண்டவாளத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒரே வாரத்தில் 2-வது சரக்கு ரெயில் தடம் புரண்ட சம்பவம் ரெயில்வே அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News