செய்திகள்
தங்க அங்கி பெட்டியை சுமந்து செல்லும் ஐயப்ப பக்தர்

சபரிமலை கோவிலில் 16 ஆண்டுகளாக தங்க அங்கி பெட்டியை சுமக்கும் திண்டுக்கல் பக்தர்

Published On 2020-12-26 09:42 GMT   |   Update On 2020-12-26 09:42 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 16 ஆண்டுகளாக பட்டிவீரன்பட்டியை சேர்ந்த ஐயப்ப பக்தர் தங்க அங்கி பெட்டியை சுமந்து செல்கிறார்.
வத்தலக்குண்டு:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு இன்று சுவாமிக்கு தங்க நகைகள் அணிவித்து பூஜைகள் நடைபெறுகிறது. இதற்காக பம்பையில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தங்க அங்கி வைத்த பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது. இதனை திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த ராமையா (வயது 57) என்பவர் சுமந்து சென்றார்.

கடந்த 16 ஆண்டுகளாக இந்த பணியை செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அகிலபாரத ஐயப்ப சேவா சங்க தமிழ்மாநில அமைப்பில் உள்ள ராமையா ஒவ்வொரு வருடமும் நடை திறக்கப்பட்டதும் கோவிலுக்கு சென்று விடுவார். பின்னர் அங்கேயே தங்கி பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

குறிப்பாக பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவருக்கு தேவையான சிகிச்சைகள், எதிர்பாராதவிதமாக இறந்து விட்டால் அவர்களை அடக்கம் செய்வதற்கான உதவிகளை செய்து வருகிறார்.

கடந்த பல ஆண்டுகளாக இவரது சேவைக்கு மரியாதை அளிக்கும் வகையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியை சுமந்து வரும் வாய்ப்பினை அகில பாரத ஐயப்ப சேவா அமைப்பு வழங்கியுள்ளது.

இது குறித்து ராமையா தெரிவிக்கையில், 16-வது ஆண்டாக ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி பெட்டியை சுமந்து வருவதில் மகிழ்ச்சி. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ஐயப்ப சேவா சங்கத்துக்கு நன்றி. என் ஆயுள் உள்ள வரை இந்த பணியை ஐயப்பனுக்காக செய்ய விரும்புகிறேன் என்றார்.

Tags:    

Similar News