செய்திகள்
முதியோர் உதவித்தொகை உத்தரவை கலெக்டர் வழங்கினார்.

30 நிமிடத்தில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணை- கலெக்டர் வழங்கினார்

Published On 2020-10-21 08:04 GMT   |   Update On 2020-10-21 08:04 GMT
வாணியம்பாடி தாலுகா அளவிலான குறைதீர்வு நாள் கூட்டத்தில் 30 நிமிடத்தில் முதியோர் உதவித்தொகை ஆணையை கலெக்டர் சிவன்அருள் வழங்கினார்.
வாணியம்பாடி:

தொற்று பரவலை தடுக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவும், மக்கள் ஒரே இடத்தில் அதிகளவில் கூடாமல் இருக்கும் வகையில் தாலுகா அளவில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்த கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில் நேற்று வாணியம்பாடி தாலுகா அளவிலான மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மனுக்களை வழங்க வந்த பொதுமக்களுக்கு கிருமிநாசினி, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட்டு ஒவ்வொருவராக அழைத்து கலெக்டர் சிவன்அருள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பொதுமக்களிடமிருந்து 145 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதாக கூறி அவர்களிடம் கைகுலுக்கி கலெக்டர் பேசினார்.

தொடர்ந்து தும்பேரி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு உடனடியாக முதியோர் உதவித் தொகைக்கான ஆணையை 30 நிமிடங்களில் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, உதவி கலெக்டர் அப்துல் முனீர், வாணியம்பாடி தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையாளர் சென்னு கிருஷ்ணன், மருத்துவ அலுவலர்பசுபதி, இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் காவல்துறை, வருவாய்துறை, வனத்துறை, போக்குவரத்துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News