செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கிசான் திட்ட முறைகேட்டில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர்

Published On 2020-09-09 08:47 GMT   |   Update On 2020-09-09 08:47 GMT
கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசித்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

* நாட்டிலேயே கொரோனா இறப்பு தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது.

* அதிக பரிசோதனை செய்யப்படுவதால் கொரோனா பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் போதிய மருத்துவ கருவிகள் இருப்பில் உள்ளன.

* திருவண்ணாமலை கோவில் பக்தர்களின் வசதிக்காக ரூ.31.24 கோடி செலவில் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது.

* திருவண்ணாமலை மாவட்டத்தில் 12,000க்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவித்தொகை புதிதாக வழங்கப்பட்டுள்ளது.

* குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வந்தவாசியில் 144 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

* நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

* கிசான் திட்ட முறைகேட்டை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததே தமிழக அரசுதான்.

* கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

* கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்
Tags:    

Similar News