செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் 986 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்

Published On 2020-08-11 13:17 GMT   |   Update On 2020-08-11 13:17 GMT
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 834 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 814 பேர். 

விமான நிலைய கண்காணிப்பில் உள்நாட்டில் இருந்து வந்தவர்களில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மார்கமாக வந்தவர்களில் 2 பேருக்கும், சாலைமார்க்கமாக வந்தவர்களில் 10 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 810 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 6 ஆயிரத்து 5 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 680 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 86
செங்கல்பட்டு - 388
சென்னை - 986
கோவை - 324
கடலூர் - 281
தர்மபுரி - 8
திண்டுக்கல் - 150
ஈரோடு - 17
கள்ளக்குறிச்சி - 74
காஞ்சிபுரம் - 330
கன்னியாகுமரி - 192
கரூர் - 31
கிருஷ்ணகிரி - 43
மதுரை - 90
நாகை - 53
நாமக்கல் - 10
நீலகிரி - 5
பெரம்பலூர் - 35
புதுக்கோட்டை - 64
ராமநாதபுரம் - 36
ராணிப்பேட்டை - 333
சேலம் - 206
சிவகங்கை - 55
தென்காசி - 136
தஞ்சாவூர் - 125
தேனி - 297
திருப்பத்தூர் - 37
திருவள்ளூர் - 362
திருவண்ணாமலை - 161
திருவாரூர் - 88
தூத்துக்குடி - 110
திருநெல்வேலி - 136
திருப்பூர் - 37
திருச்சி - 86
வேலூர் - 181
விழுப்புரம் - 91
விருதுநகர் - 180
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 0
உள்நாடு - 8
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

மொத்தம் - 5,834
Tags:    

Similar News