செய்திகள்
கொரோனா வைரஸ்

சோழிங்கநல்லூர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 8 சதவீதம் அதிகரிப்பு- சென்னை மாநகராட்சி தகவல்

Published On 2020-08-09 22:27 GMT   |   Update On 2020-08-09 22:27 GMT
கடந்த 7 நாட்களில் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 8 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னையில் கடந்த 7 நாட்களில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது எனவும், 10 மண்டலங்களில் பாதிப்பு குறைந்துள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி சோழிங்கநல்லூர் மண்டலத்தில் அதிகபட்சமாக கடந்த 7 நாட்களில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2.4 சதவீதமும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 1 சதவீதமும், ஆலந்தூர் மண்டலத்தில் 0.6 சதவீதமும், அம்பத்தூர் மண்டலத்தில் 0.3 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஆனால் பெருங்குடி மண்டலத்தில் 0.5 சதவீதமும், அண்ணாநகர் மற்றும் அடையாறு மண்டலங்களில் 0.6 சதவீதமும், ராயபுரம் மண்டலத்தில் 0.9 சதவீதமும் பாதிப்பு குறைந்துள்ளது.

இதேபோல் வளசரவாக்கத்தில் 2.1 சதவீதமும், தண்டையார்பேட்டையில் 2.2 சதவீதமும், தேனாம்பேட்டையில் 2.5 சதவீதமும், திருவொற்றியூர் 4 சதவீதமும், மாதவரத்தில் 7.5 சதவீதமும், மணலி மண்டலத்தில் 9.2 சதவீதமும் பாதிப்பு குறைந்துள்ளது.

மேற்கண்ட தகவல்கள் சென்னை மாநகராட்சி இணையதளம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News