செய்திகள்
கைது

முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்- ஆட்டோ டிரைவர் கைது

Published On 2020-07-10 01:25 GMT   |   Update On 2020-07-10 01:25 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னையில் இயங்கும் மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 4.45 மணியளவில் மர்ம நபர் ஒருவர் செல்போனில் பேசினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்க போகிறது என்று கூறிவிட்டு அவர் போனை வைத்துவிட்டார்.

உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும் சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அது புரளி என்பது தெரிய வந்தது. உடனடியாக செல்போனில் பேசிய மர்ம நபர் யார்? என்று போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள். செல்போன் எண்ணை வைத்து விசாரித்ததில் அவர் பெயர் வினோத்குமார் (வயது 33) என்றும், தாம்பரம் சேலையூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. சேலையூர் போலீசார் வினோத்குமாரை நேற்று இரவு கைது செய்தனர். அவர் ஆட்டோ டிரைவர் ஆவார்.
Tags:    

Similar News