செய்திகள்
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-08 14:07 GMT   |   Update On 2020-07-08 14:07 GMT
கீழ்பென்னாத்தூர், ஜவ்வாதுமலையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பென்னாத்தூர்:

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய கிளை சார்பில் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம நடந்தது. ஒன்றிய தலைவர் ஜி.ஏழுமலை தலைமை தாங்கினார். செயலாளர் இந்திரா, துணை தலைவர்கள் பழனி, பரணி, சகலகலாவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் சீத்தாராமன் வாழ்த்தி பேசினார். மாநில துணை தலைவர் அண்ணாதுரை சிறப்புரை ஆற்றினார்.

அப்போது சத்துணவு மையத்தில் மாணவர்களுக்கு கொரோனா காலம் முடியும் வரை சத்துணவு தயாரித்து வழங்க வேண்டும். மாறாக அதற்கான மானிய தொகையை பெற்றோர்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவதை அரசு கைவிட வேண்டும். சத்துணவு மையத்தில் பணிபுரியும் சமையல் உதவியாளர்களுக்கு வயது வரம்பு 60 ஆக உயர்த்த வேண்டும். 2 மாதத்திற்குண்டான ஊக்கத்தொகையையும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். முடிவில் பொருளாளர் ஷம்ஷாத் நன்றி கூறினார்.

இதேபோல தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஜவ்வாதுமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் எம்.அன்பழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய இணை செயலாளர் எம்.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய துணை தலைவர் எம்.பரமேஸ்வரி வாழ்த்தி பேசினார்.

இதில் உறுப்பினர் சுமார் 20 பேர் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர். முடிவில் ஞானமுத்து நன்றி கூறினார்.
Tags:    

Similar News