செய்திகள்
ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியை தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

ஆதிச்சநல்லூரில் மேலும் ஒரு முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

Published On 2020-06-15 02:13 GMT   |   Update On 2020-06-15 02:13 GMT
ஆதிச்சநல்லூரில் பாண்டியராஜா கோவில் அருகில், மேலும் ஒரு முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:

தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே சிவகளை ஆகிய இடங்களில் தமிழக அரசு சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை அதிகாரிகள் பாஸ்கர், லோகநாதன் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள பாண்டியராஜா கோவில் அருகில் 4 இடங்களிலும், கால்வாய் ரோடு, புளியங்குளம் பின்புறம் ஆகிய இடங்களில் தலா ஓரிடத்திலும் பள்ளங்களை தோண்டி, தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர். அங்கு 2 முதுமக்கள் தாழிகள் முழுமையாகவும், 3 முதுமக்கள் தாழிகள் சிதைந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாண்டியராஜா கோவில் அருகில், மேலும் ஒரு முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை முழுமையாக அகழ்ந்து வெளியே எடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், எலும்புகள் போன்றவற்றை தார்ப்பாயால் தொல்லியல் துறையினர் மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
Tags:    

Similar News