செய்திகள்
திருமணம்

கொரோனா பணிக்காக திருமணத்தை தள்ளிவைத்த கோவை போலீஸ்காரர்

Published On 2020-05-29 10:18 GMT   |   Update On 2020-05-29 10:18 GMT
வடமாநிலத்துக்கு சிறப்பு ரெயிலில் செல்லும் தொழிலாளர்களை அனுப்பும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் கோவை போலீஸ்காரர் தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார்.
திருப்பூர்:

கோவைப்புதூர் பட்டாலியன் போலீஸ் படைப்பிரிவில் பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கடேஷ்பிரபு என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் கொரோனா பாதுகாப்பு பணிக்காக கடந்த மாதம் திருப்பூர் சென்றார்.

வெங்கடேஷ் பிரபுவுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அவர்களின் திருமணம் நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. ஆனால் வெங்கடேஷ் பிரபு கொரோனா பணியில் இருந்ததால் தனது திருமணத்தை தள்ளி வைத்தார். இது தொடர்பாக இரு வீட்டிலும் பேசி அவர் இந்த முடிவை எடுத்தார். இது குறித்து அவர் கூறுகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இது தவிர கொரோனா பணியிலும் நான் உள்ளேன்.

தற்போது திருமணம் செய்ய சூழல் இல்லாததால் திருமணத்தை தள்ளி வைத்து தொடர்ந்து பணியில் உள்ளேன்.

முழு ஊரடங்கு முடிந்ததும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளேன் என்றார். தற்போது வெங்கடேஷ் பிரபு திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் வடமாநிலத்துக்கு சிறப்பு ரெயிலில் செல்லும் தொழிலாளர்களை அனுப்பும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
Tags:    

Similar News