செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு விற்பனைக்கு வந்துள்ள பலாப்பழங்களை படத்தில் காணலாம்.

பலாப்பழ விற்பனை மந்தம்

Published On 2020-05-26 05:31 GMT   |   Update On 2020-05-26 05:31 GMT
கொரோனா தாக்கம் காரணமாக பலாப்பழ விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் பலா பயிரிட்டு உள்ளனர். தற்போது பலாப்பழ சீசன் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி பல்வேறு பகுதியில் இருந்தும் விற்பனைக்காக பலாப்பழங்கள் வந்து குவிந்துள்ளன. பொதுவாக பலாப்பழங்கள் விற்பனைக்கு வந்ததும் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பலாப்பழங்களை கொண்டு செல்வதில் சிக்கல் இருப்பதால் விற்பனையில் மந்தம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களும் பலாப்பழங்களை முன்புபோல் வழங்குவதற்கு போதிய ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
Tags:    

Similar News