செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

பொய் கூறுவதே நாராயணசாமிக்கு வாடிக்கை- கிரண்பேடி கடும் தாக்கு

Published On 2020-03-02 10:37 GMT   |   Update On 2020-03-02 10:37 GMT
நாள்தோறும் பொய் கூறுவதே முதல்- அமைச்சர் நாராயணசாமிக்கு வாடிக்கை என்று கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி, மார்ச். 2-

புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

மத்திய கப்பல் போக்கு வரத்துத்துறை அமைச்சர் மன்சுக்மாண்டேவியா புதுவைக்கு வந்து ஆய்வுக்கூட்டம் நடத்தி, விரைவில் போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிவித்தார்.

காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் செல்ல 3 மணி நேரமாகும். இலங்கையிலிருந்து அதிகளவு பயணிகள் காரைக்கால் திருநள்ளாறு கோவிலுக்கு வருகின்றனர். கப்பல் போக்குவரத்து தொடங்கினால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக் கும் என நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

காரைக்கால் துறைமுகத் தில் தனியார் நிறுவனம் சரக்கு போக்குவரத்து இயக்கி வருகிறது. அங்கிருந்து தனியாரே பயணிகள் கப்பல் போக்குவரத்தையும் இயக்க தயாராக உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் இந்த கப்பல் போக்குவரத்திற்கு கவர்னர் முட்டுக்கட்டை போட்டுள்ளதாகவும், மத்திய அரசுக்கு கவர்னர் தடை ஏற்படுத்த கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறினார்.

இத்தகவல் இன்று அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது. இந்த செய்திகளை சுட்டிக்காட்டி கவர்னர் கிரண்பேடி ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

காரைக்காலில் இருந்து கப்பல் போக்குவரத்து தொடங்க நானும் மத்திய மந்திரியிடம் பரிந்துரை செய்திருந்தேன். கப்பல் போக்குவரத்து தொடங்க பயணிகளிடம் இமிகிரே‌ஷன் சோதனை நடத்தப்பட வேண்டும், உளவுப்பிரிவு, கடத்தல் தடுப்பு பிரிவு, போக்குவரத்து ஆகியவற்றை யும் ஒரே நேரத்தில் ஏற்படுத்த வேண்டும்.

தலைமை செயலர் தலைமையில் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு தேவைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் சிலர் நாள்தோறும் பொய்களை மட்டுமே கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

கவர்னர் தடை ஏற்படுத்துவ தாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார், அவர் நாள்தோறும் பொய் சொல்கிறார் என்பதையே கவர்னர் கிரண்பேடி மறைமுகமாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News