செய்திகள்
நாராயணசாமி

புதுவையில் கவர்னரின் தேனீர் விருந்தை புறக்கணித்த நாராயணசாமி

Published On 2020-01-27 04:17 GMT   |   Update On 2020-01-27 04:17 GMT
புதுவையில் கவர்னரின் தேனீர் விருந்தில் பங்கேற்காமல் விழாவை பாதியிலேயே புறக்கணித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் ஆகியோர் வெளியேறினர்.
புதுச்சேரி:

குடியரசு தினத்தை முன்னிட்டு புதுவை கவர்னர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களுக்கு தேனீர் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கவர்னர் கிரண்பேடி தலைமை தாங்கினர். முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுல கிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் மற்றும் தலைமை செயலாளர் அஸ்வனி குமார்,

கலெக்டர் அருண், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவா, புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங், பிரெஞ்சு துணை தூதர் கேத்ரின் ஸ்வார்டு மற்றும் அரசு செயலாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் தேனீர் விருந்தில் பங்கேற்காமல் விழாவை பாதியிலேயே புறக்கணித்து கவர்னர் மாளிகையில் இருந்து வெளியேறினர்.

மேலும் காங்கிரஸ், தி.மு.க., என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் தேனீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

தொடர்ந்து நடந்த விழாவில் பத்மபூ‌ஷண் விருது பெற்ற பேராசிரியர் மனோஜ்தாஸ், பத்மஸ்ரீ விருது பெற்ற சுடுமண் சிற்ப கலைஞர் முனுசாமி ஆகியோரை கவர்னர் கிரண்பேடி பாராட்டி கவுரவித்தார்.
Tags:    

Similar News