செய்திகள்
மதுரை ஐகோர்ட்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து- மதுரை ஐகோர்ட்

Published On 2019-12-20 10:06 GMT   |   Update On 2019-12-20 10:06 GMT
உரிய கல்வித்தகுதி இல்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தில் விதிமீறல் உள்ளது.

உரிய கல்வி தகுதி இல்லாமல் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே பாலசுப்பிரமணியனின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதி வி.எம்.வேலுமணி விசாரித்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதில், உரிய விதிகளின் படி நியமனம் இல்லாததால் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News