செய்திகள்
தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்

தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு 4-வது இடம்

Published On 2019-12-07 03:06 GMT   |   Update On 2019-12-07 05:11 GMT
இந்திய அளவில் சிறந்த போலீஸ் நிலைய பட்டியலில் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
தேனி:

மத்திய உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள சிறந்த 10 போலீஸ் நிலையங்களை தேர்வு செய்து அதற்கான பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் அந்தமானில் உள்ள அபெர்தீன் போலீஸ் நிலையம் முதலிடத்தை பிடித்தது. 2-வது இடத்தை குஜராத் மாநிலத்தின் பாலசினார் போலீஸ் நிலையமும், 3-வது இடத்தை மத்தியபிரதேசத்தின் அஜிக் புர்ஹன்பூர் போலீஸ் நிலையமும் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

இது தேனி மாவட்ட போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஆண்டுக்கான சிறந்த 10 போலீஸ் நிலையங்கள் பட்டியலில் தேனி மாவட்டத்தின் பெரியகுளம் போலீஸ் நிலையம் 8-வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News