செய்திகள்
கைது

பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் துப்பாக்கி முனையில் கைது

Published On 2019-11-19 09:21 GMT   |   Update On 2019-11-19 09:21 GMT
ஆந்திராவில் இருந்து சென்னை வந்தபோது பிரபல ரவுடி ஆற்காடு சுரேசை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

சென்னை, நவ. 19-

சென்னை புளியந் தோப்பைச்சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் மீது 5 கொலை வழக்கு உள்பட 50 வழக்குகள் உள்ளன.

ஏ பிளஸ் பிரிவு ரவடி யான ஆற்காடு சுரேசை புளியந் தோப்பு போலீஸ் இன்ஸ் பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். ஆந்திராவில் அவன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் கைது செய்யும் முயற்சியில் இறங்கினர். போலீசார் தேடுவதை அறிந்ததும் சென்னைக்கு தப்பி வந்த ஆற்காடு சுரேசை கன் னிகாபுரத்தில் வைத்து துப் பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர்.

ஆற்காடு சுரேஷ் மீது கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளும் உள் ளன. குண்டர் சட்டத்தின் கீழ் சுரேசை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல புளியந் தோப்பைச் சேர்ந்த இன் னொரு ரவுடியான ராஜேஷ் என்ற ஆங்கிள் ராஜேசும் கைது செய்யப்பட்டான். ஏ.பிரிவு ரவுடியான ராஜேஷ் மீது கெலை வழக்கு உள்பட 20 வழக்குகள் உள்ளன. கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தபப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர்.

இதனையடுத்து போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வ நாதன், வடசென்னை கூடு தல் கமி‌ஷனர் தினகரன் ஆகியோர் இன்ஸ்பெக் டர் கிருஷ்ணமூர்த்திக்கு பாராட்டு தெரிவித்தனர்.

புளியந்தோப்பு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதி யில் ரவுடிகள் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இது ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற் படுத்தி உள்ளது.

Tags:    

Similar News