செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ரூ.206 கோடி செலவில் பெருங்களத்தூரில் ரெயில்வே மேம்பாலம்- முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Published On 2019-11-02 08:52 GMT   |   Update On 2019-11-02 08:52 GMT
பெருங்களத்தூரில் ரெயில்வே கடவு எண்.32க்கு மாற்றாக 206 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ரெயில்வே மேம்பாலத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தரமான சாலைகள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் மற்றும் வண்டலூர் ரெயில் நிலையங்களுக்கிடையே பெருங்களத்தூரில் ரெயில்வே கடவு எண்.32க்கு மாற்றாக 206 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ரெயில்வே மேம்பாலத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
Tags:    

Similar News