செய்திகள்
இருளில் மூழ்கிய கிராமம்

வடமதுரை அருகே மின் கம்பம் சாய்ந்ததால் இருளில் மூழ்கிய கிராமம்

Published On 2019-11-01 10:30 GMT   |   Update On 2019-11-01 10:30 GMT
வடமதுரை அருகே கன மழைக்கு மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில் அந்த கிராமமே இருளில் மூழ்கியது.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. வடமதுரை அருகே உள்ள காக்கையனூரில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தென்னை மரங்கள் முறிந்து விழுந்தது.

மேலும் மின் கம்பமும் சாய்ந்து விழுந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக இந்த கிராமமே இருளில் மூழ்கி கிடந்தது. தொலை தொடர்பு மற்றும் மின்சார வசதி இல்லாததால் கிராம மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

நேற்று முதல் மழையின் தாக்கம் குறைந்துள்ளது. இதனையடுத்து இன்று காலை காக்கையனூர் கிராமத்துக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்து கிடந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அருகிலேயே அங்கன்வாடி மையம் உள்ளது. மின் கம்பம் தனியாருக்கு சொந்தமான சுவற்றில் விழுந்ததால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அங்கன்வாடி மைய கட்டிடத்தில் விழுந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்.

எனவே இப்பகுதியில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைத்து தர கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News