செய்திகள்
வருமானவரி சோதனை

பஞ்சாமிர்த கடை, உரிமையாளர் வீடுகளில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

Published On 2019-08-30 07:54 GMT   |   Update On 2019-08-30 07:54 GMT
பழனி பஞ்சாமிர்த கடை மற்றும் உரிமையாளர் வீடுகளில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பழனி:

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு முக்கிய பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர்.

சுவை மிகுந்த இந்த பஞ்சாமிர்தம் பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. பழனி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் ஆண்டுக்கு பல கோடி விற்பனை நடைபெற்று வருகிறது.

கிரிவீதி பகுதியில் ஏராளமான பஞ்சாமிர்த கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நேற்று அதிகாலை மதுரை, திண்டுக்கல் வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட கார்களில் வந்தனர்.

அவர்கள் கடை, உரிமையாளர்களின் வீடுகள், லாட்ஜூகள், ஓட்டல்கள், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இன்றும் 2-வது நாளாக சம்பந்தப்பட்டவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடையினர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டார்களா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இத

Tags:    

Similar News